Just wanted share these factful thoughts which I liked while i was going through some random sites. Ensooooooiiii..!!!
*****************************
பெயருக்குப் பின்னால் அப்பா பெயரோடு தொலைந்து போகும் தோழிகள்…
கணவர் பெயரோடு பேஸ் புக்கில் திரும்பக் கிடைக்கிறார்கள்.
********************************
நான் எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பதை முன்னாள் செல்லும் ஸ்கூட்டியே நிர்ணயிக்கிறது..!
****************************
வெறுப்பை மறைத்து சிரிப்பை அலுவலகத்திலும்.,
சிரிப்பை மறைத்து வெறுப்பை வீட்டிலும் உமிழ்கிறேன்!
******************************
நீங்கள் எங்கே வசித்தாலும், பார்த்த மாத்திரத்தில் உங்களை உங்கள் ஊரோடு இணைக்க வல்லவை ஜவுளிக்கடை கட்டைப் பைகள்!
**********************************
தவறுகளுக்கான காரணங்கள் நியாயமாகவே இருக்கின்றன., நாம் செய்தால் மட்டும்.
**************************************
வேலைவெட்டி இல்லாத ஆணை கல்யாணம் செய்ய பெண் முன் வராத வரை.,
சம உரிமை என்பது வெறும் கூச்சல்!
**************************************
குளிரை அனுபவிக்கிறேன்னு ஊட்டியில போய் ஹீட்டர் போட்டு கிட்டு தூங்குபவனே மனிதன்!!!
**************************************
புத்தாண்டில் ஒன்றும் மாறப்போவதில்லை… என்பது திங்கட்கிழமை அலுவலகத்தில் கால் வைத்தவுடனே உரைத்துவிட்டது.!
கடுப்பெத்துறார் மை லார்ட்…
****************************************
தோல்வியின் விரக்தியில் கடவுளைச் சபிக்கும் உங்களில் எத்தனை பேர்,
வெற்றியின் பெருமிதத்தில் நன்றி சொல்லியிருப்பீர்கள்?
***********************************
பத்து மணி நேரம் தூங்குவது சோம்பேறித்தனம் அல்ல.
ஒரு மணி நேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்.
**************************************
வளர்ச்சி என்பது… அப்பாவின் திட்டுக்கு கடுப்பாவதில் தொடங்கி…
மானேஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது.
*********************************
கோபத்தை கட்டுபடுத்த , அது வரும்போது ஒன்னு முதல் பத்து வர தல கீழா என்னனுமாம். கேக்கும்போதே செம கோவம் வருது!
***********************************
தேர்வில்… தெரியாத விடைக்கு தலையை சொரிபவனை விட.,
முன்னிருப்பவனின் முதுகை சொரிபவனே தேர்ச்சியடைகிறான்!
***********************************
உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
உங்களாலேயே அதை இரகசியமாய் வைக்க முடியாத போது, மற்றவர்களால் எப்படி முடியும்?

“உண்மையை உளறிவிட்டேனே” என்கிற போதுதான் உண்மையிலேயே உளறிவிடுகிராய்!

உணவகங்களில் பணி செய்யும் வடகிழக்கு இந்தியர்கள் முகம் சுழித்தோ,
கோபமுற்றோ கண்டதில்லை.
அது இயல்பா.,வறுமையின் வெளிப்பாடா தெரியவில்லை.
******************************
‘நான் பெருமைக்காக பேசவில்லை’ என்று பேசத் தொடங்குபவர்கள்.,
பெருமையைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.
******************************
எனக்குத் தெரிஞ்ச த்ரில்லான பயணம்.,
பெட்ரோல் எப்ப தீரும்னு தெரியாம பைக் ஓட்றதுதான் !!!
******************************
‘கேம் சோ’ நிகழ்சிகளில் எனக்குத் தெரிந்தவர்களோ, என் உறவினர், நண்பர்களுக்குத் தெரிந்தவர்களோ இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. அப்போ நிஜமாவே இவிங்கல்லாம் யாரு???
******************************
ஹோட்டலில் நமக்கான உணவு வருவதை பார்க்கையில் கூட., ஒரு வெற்றிப் பெருமிதம் தோன்றுகிறது!
******************************
உலகில் முதல் பெண்ணே சொல் பேச்சு கேக்காதவள் தான்!
ஆப்பிள் சாப்பிடாதே ன்னு கடவுள் சொல்லியும் கேக்கலையே???
******************************
தன் கண்ணீரை பிறர் பார்வைக்கு காட்சிப் பொருளாக வைப்பதை விட
கொடுமையானது உலகில் இல்லை.
******************************
‘நானே இறங்கி வரேன்! உனக்கென்ன இவ்ளோ ஈகோ?’ என்பதில் ‘நானே’ என்பதென்னவோ???
******************************
பொய் சொல்லாமல் ஆண்கள் காதலிப்பதில்லை.
உண்மை சொல்லும்போது பெண்கள் ஏற்பதில்லை!!!
******************************
மனைவியின் பல மிஸ்டு கால்களை பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் இல்லை.
******************************
ஒரு பெண்ணை முழுதாகப் புரிந்து கொள்ள முடிவது.,
அவள் நம்மை பிரிந்து செல்லும் போதுதான்!
******************************
ஸ்டாம்ப் ஒட்டாமல் வரும் கடிதங்களின் பரிணாம வளர்ச்சிதான்… மிஸ்டு கால்!
******************************
அபராதம் என்பது தவறாக நடந்து கொண்டதற்கு செலுத்தப்படும் வரி.
வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப் படும் அபராதம்!
******************************
‘கருத்தை விதை’ என்பதே ‘கவிதை’ என்றாகியிருக்க வேண்டும்!
******************************
மரத்த வெட்டிப் பேப்பர் செஞ்சு.,
அந்த பேப்பர்லயே ‘சேவ் ட்ரீஸ்’ ன்னு எழுதி ஓட்டுறவன் தான் மனிதன்!!!
******************************
சாலை விபத்து நடந்ததைச் சொல்லும் சாலையோர கண்ணாடித் துண்டுகள்.,
கசக்கும் கற்கண்டுகள்!
******************************
தாய் மொழியை கற்றுக் கொள்வதற்கு முன்.,
குழந்தை அதன் மொழியை தாய்க்கு கற்றுக் கொடுக்கிறது!
******************************
“மாசக் கடைசி என்பது.,
இரண்டாம் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறது” – அல்லல்படும் ஆண்கள
***************************
வாக்காளர் அடையாள அட்டை.,
வாக்களிப்பதை விட., புதிய சிம் கார்டுகள
வாங்கவே அதிகம் பயன்படுகிறது!
***************************
உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைப் பட வேண்டாம்…
அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்!
***************************
உன்னை மறந்து தூங்கினேன் நான்…
மறக்காமல் வந்தாய் என் கனவில் நீ!
***************************
எழுத்துக்கள்/ பேசும் வார்த்தைகள் சொல்லும் அர்த்தங்களை விட.,
மௌனம் சொல்லும் ஆயிரம் அர்த்தங்களை!

0 Comments